வகைப்படுத்தப்படாத

இன்ஃபுலுவன்சா பி வைரஸ் மீண்டும் பரவுகிறது- எச்சரிக்கின்றது அரசாங்கம்

(UTV|COLOMBO)-இன்ஃபுலுவன்சா பி வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமை காரணமாக அது குறித்து அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நொவம்பர், டிசெம்பர் மற்றும் ஜனவரி மாத காலப்பகுதியினுள் இன்ஃபுலுவன்சா வைரஸின் தொற்று அதிகரித்து காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பரிசோதனைகளை  மேற்கொள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட மருத்துவர்கள் சென்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்.
கடந்த 20 நாட்களில் இன்ஃபுலுவன்சா பி வைரஸ் தொற்றின் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுதவிர வைரஸ் தொற்றால் சுமார் 100 பேர் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

US brings in new fast-track deportation rule

எரி பொருட்களின் விலையில் மாற்றம்.?