விளையாட்டு

“இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம்” – திமுத் கருணாரத்ன

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன“ இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம். ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல் போய்விடும்“ என  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பில், தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே திமுத் கருணாரத்ன இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“ உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். எமது எதிர்காலமும் உங்களது தற்போதைய நடவடிக்கையில் தான் இருக்கிறது. அன்பை பரப்புங்கள். இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம்“ என்றும் திமுத் கருணாரத்ன தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Related posts

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று…

இன்று களமிறங்கும் இலங்கை –பங்களாதேஷ் அணிகள்

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி