உலகம்

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

(UTV | இந்தோனேசியா ) – இந்தோனேசியா நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

போர்னியோ தீவின் தரகன் பகுதியின் நேற்று பெய்த கடும் மழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் அப்பகுதியில் இருந்த சில வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், சிலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹெலி விபத்தில் 5 பொலிசார் உயிரிழப்பு

விளாடிமிர் புதின : அடுத்த 15 ஆண்டுகள் ஆட்சி

சூடான் முன்னாள் பிரதமர் கொவிட் 19 இற்கு பலி