வகைப்படுத்தப்படாத

இந்தோனேசிய ஜனாதிபதியாக மீளவும் ஜோக்கோ விடோடோ பதவியேற்பு

(UTV|COLOMBO) – இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

நாட்டின் வௌிவிவகார தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் அடுத்த ஐந்து வருட பதவிக்காலத்துக்கான உறுதிமொழியை ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ மற்றும் துணை ஜனாதிபதி மரூப் அமீன் ஆகியோர் வாசித்துள்ளனர்.

ஜோக்கோ விடோடோ குறி வைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் 30,000 பாதுகாப்பு அதிகாரிகள் சூழ பதவியேற்பு வைபவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் 55.5 வீத வாக்குகளை பெற்று ஜோக்கோ விடோடோ வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ඩෙංගු අවධානම ඉහළට

தேசிய பௌத்த புத்திஜீவிகள் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

Rail commuters stranded due to train strike