உள்நாடு

இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படும்

(UTV | கொழும்பு) – டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியை முன்னெடுக்க முடியாதுள்ளது. இது ஒளடத இறக்குமதியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது உண்மையே.

ஆனால் இப்போது வரையில் உள்நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலையொன்று ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சுகாதார அமைச்சரிடம் அது குறித்து வினவிய போதே இவ்வாறு கூறினார்.

Related posts

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

இரண்டாவது உரக் கப்பல் இன்னும் இரு வாரங்களில்

ராகமயில் துப்பாக்கிச் சூடு