அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவின் புது டெல்லியில் தாக்குதல் குறித்து ஜனாதிபதி அநுர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் X பதிவு!

இந்தியாவின் புது டெல்லி தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது ‘X’கணக்கில் பதிவிட்ட குறிப்பில், இந்தச் செய்தியைக் கேட்டவுடன் தாம் மிகவும் மனவேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வெடிப்புச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தனது ‘X’ கணக்கு மூலம் ஒரு குறிப்பைப் பதிவிட்டு, இத்தாக்குதலைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதம் என்ற கொடிய நோயை வேரோடு பிடுங்கி எறிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தவிர, அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்தத் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

காலியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் பலி

editor

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா செல்கிறார்

editor