இந்தியாவின் அசாம் மாநிலத்தை இன்று மாலை 4.41 மணிக்கு 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
உடல்குரி மாவட்டத்தை மையமாக கொண்டு 26.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பூமிக்கு 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் ஆழ்த்தினர்.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் வடகிழக்கு மாநிலநகளிலும், அண்டை நாடான பூட்டனிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.