அரசியல்உள்நாடு

இந்தியா பறந்தார் ரணில்!

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று (09) மாலை புதுடெல்லி தலைநகரில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான அரசு தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

44 நாட்கள் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அண்மையில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி நேரில் ஆய்வு

editor

ஒட்சிசனுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

பல்கலைக்கழக விண்ணப்பங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை