உள்நாடு

இந்தியர்கள் 153 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- சுற்றுலா மேற்கொள்ள இலங்கைக்கு வருகை தந்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் இருந்த இந்திய சுற்றுலா பயணிகள் 153 பேர் இன்று(15) காலை இந்தியா நோக்கி பயணித்துள்ளனர்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 1202 என்ற விமானத்தின் மூலம் இவர்கள் இன்று(15) காலை இந்தியா நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு இந்தியா நோக்கி செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தற்காலிக விடுதிகளில் 7 நாட்கள் தங்கவைக்கப்பட்டு பின்னர் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் சுய தனிமைப்படுலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடக்கு-கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை : மகாநாயக்கர்களிடம் எடுத்துரைப்பு

போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது

இலங்கை இராணுவத்தின் 24 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு!