உள்நாடு

“இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்கத் தயார்”

(UTV | கொழும்பு) – இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு எதிர்காலத்திலும் நிதியுதவி வழங்குவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று (27) இரவு இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் விளைவாக இது அமைந்தது.

Related posts

மேலும் 415 பேர் குணமடைந்தனர்

திறப்பதா, இல்லையா : தீர்மானம் இன்று

பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு ஆரம்பம்