அரசியல்உள்நாடு

இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அநுர சீனா விஜயம் – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சீன தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் அவர் மேற்கொள்ளும் முதலவாது வெளிநாட்டு விஜயம் எனினும் இதற்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் பிரதமரைச் சந்தித்தார்

editor

13ஐ நிராகரிக்கும் கூட்டமைப்பு : ஜனாதிபதி சந்திப்பை விமர்சிக்கும் சுமந்திரன்