வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான கட்சி இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின் படி முன்னணியில்

(UTV|INDIA) நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக இடம்பெற்ற தேர்தலில் 90 கோடி மக்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். 543 ஆசனங்களைக் கொண்ட இந்திய பாராளுமன்றத்தின் அங்கத்துவம் பெற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் எண்ணாயிரத்தக்கும் சற்று அதிகமான தொகை வேற்பாளர்களைக் களம் இறக்கி இருந்தது.

பிரதான கட்சிகளாக இந்தியாவின் பாரம்பரிய அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியும், நவ இந்துத்வா கொள்கையுடன் வழிநடத்தப்படும் பாரதீய ஜனதாக் கட்சியும் அமைந்திருந்தன.

இந்திய அரசியலின் இளவரசன்  என வர்ணிக்கப்படும் அரசியல் பாரம்பரிம் மிக்க குடும்பத்தின் வாரிசான ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரசாரங்களை நெறிப்படுத்தினார்.

தேசியவாத போரவையில் இந்துத்வா கொள்கையில் மூழ்கிப் போய் இந்து தீவிரப் போக்கு அமைப்புக்களின் செல்வாக்கைப் பெற்ற இந்தியாவின் நவீன மீற்பாளராக தன்னை அடையாளப் படுத்தி உள்ள நரேந்திர மோடி பி.ஜே.பி எனப்படும் பாரதிய ஜனதாக் கட்சியை வழிநடத்தினர்.

மோடியின் கொள்கைகளுக்கான ஒரு தேசிய விமர்சனமாகவும்,மீள் பரிசோதனையாகவும், ஜனரஞ்சக அபிமானமானமாகவும், ராகுல் காந்தியின் ஆளுமைக்கான அங்கீகாரமாகவும் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தேர்தலாகவும் நோக்கப்பட்ட இந்தத் தேர்தலில் அரசியல் வாரிசு அல்லது இளவரசர் தலைமையிலான பாரம்பரிய சக்தி மீண்டும் ஒரு தடவை தலைகுனிந்துள்ளது.

நவீன தேசியவாத பேரவையின் கீழ் செயற்படும் இந்துத்வா சக்தி மீண்டும் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின் படி பி.ஜே.பி 324 ஆசனங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 106 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 ஆசனங்கள் போதுமானவை என்ற நிலையில் இரண்டு பிரதான கட்சிகளும் இந்த ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளன.

 

 

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின் படி முன்னணியில்

Related posts

Royse Fernando’s bail application rejected

தாக்குதல் நடத்த தயாராகும் பிரான்ஸ்

கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை