வகைப்படுத்தப்படாத

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட கடலின் மன்னார் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து கடற்றொழிலார்கள் கச்சதீவு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு இலங்கை கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களும் மேலதிக விசாரணைகளின் பொருட்டு மன்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Enterprise Sri Lanka Exhibition commences

களுத்துறையில் மண் சரிவு

Brazil jail riot leaves at least 57 dead