அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி இலங்கையின் பாதுகாப்புப் பிரதி அமைச்சரை சந்தித்தார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (07) கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று (07) நாட்டை வந்தடைந்திருந்தனர்.

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதியை, பிரதியமைச்சர் அருண ஜயசேகர மிக அன்புடன் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அயல் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் வரலாற்று, கலாசார மற்றும் நாகரிக ரீதியிலான தொடர்புகளை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

Related posts

அடுத்த சில நாட்களில் இலங்கையுடன் ஒப்பந்தம் பேச்சு: IMF

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது