உள்நாடு

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் முதல் 3 வாரங்களில் 2 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக மேற்படி பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதோடு, அதன் எண்ணிக்கை 1,576 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து 491 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 558 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 95 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவக்கூடிய அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் 22 அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இந்த அருள் நிறைந்த மாதம் எமக்கும் முழு தேசத்திற்கும் அமைதி, சுபீட்சத்திற்கான செய்தியைக் கொண்டு வரட்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

2021ம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

ஜனாதிபதி அநுர மறந்து போன வாக்குறுதிகளை நினைவு படுத்துவோம் – அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கமல்ல – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor