உள்நாடு

இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் இன்று வானத்தில் தோன்றும்

2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் பூரணை தினமான இன்று (06) வானில் காட்சியளிக்கவுள்ளது.

வழமையாக வானில் தோன்றும் முழு நிலவை விட சுமார் 7% பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என்று ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது.

நிலவு முழு பௌர்ணமியாக இருக்கும் அதே நேரத்தில், அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக மிக அருகில் வரும் ஒரு தற்செயல் நிகழ்வு ஏற்படும் போதுதான் இது ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

முழு நிலவின் ஒளி விவசாயிகள் இருட்டிய பிறகும் பயிர்களை சேகரிக்க பேருதவியாக இருக்கும்.

விவசாய நாட்டுப்புற கதைகளில் இதனை​ைஅறுவடை முழு நிலவு என்றும் குறிப்பிடுவார்கள்.

இந்த அற்புத சூப்பர் மூனைக் இன்றைய தினம் பொதுமக்கள் நேரடியாக பார்க்க முடியும். இதில் எவ்வித பாதிப்புகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூரணை தினத்தில் ‘சூப்பர் மூன்’ ஏற்படும். ஆனால் அனைத்து பூரணை தினத்திலும் ‘சூப்பர் மூன்’ நிகழ்வதில்லை.

அடுத்த ‘சூப்பர் மூன் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதியும், டிசம்பர் 4 ஆம் திகதியும் நிகழ்கிறது.

1979ல் வானியல் நிபுணர் ரிச்சர்ட் நுாலே ‘சூப்பர் மூன்’ என்ற பெயரை அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெலிகம சஹான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor

வசந்த முதலிகே’வை TID இடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட 29 வயதுடைய பெண்

editor