அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கத்தின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது – கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

வெள்ளிக்கிழமை கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான முகம் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னர் எங்களிடம் இதைத்தான் கூறினார். இதை பதிவு செய்து ஊடகங்களுக்கு வெளியிடுமாறு அவர் என்னிடம் தெரிவித்தார்” என ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“நான் எப்போதும் தேசத்திற்காகவே உழைத்தேன். நான் தனிப்பட்ட ஆதாயம் பெறவில்லை.

இந்த அரசாங்கத்தின் உண்மையான முகம் இன்று வெளிப்பட்டுள்ளது” என்று ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

editor

கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கையொப்பமிட்ட ஆளுநர்

காஞ்சனவுக்கு எதிராக மின்சார சபையின் பொறியியலாளர்கள்