உள்நாடு

இதுவரையில் கொரோனா நோயாளிகள் 2,760 பேர் குணம்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் 5 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று(19) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,760 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 131 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2,902 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை – மகிந்த அமரவீர கோரிக்கை.

தகனம் மற்றும் அடக்கம் குறித்த நிபுணர் குழு கூட்டம் இன்று

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு