உள்நாடு

இதுவரையில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 61,621 பேர் கைது

(UTV – கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 150 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று வரையான கால பகுதியில் 61,621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 17,322 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே ஊரடங்கு சட்டத்தினை மீறிய 18,496 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6,991 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாடு முழுவதும் இபோச பேருந்துகள் வேலை நிறுத்தம்?

வேலையை இழந்த 20,000 ஆடைத் தொழிலாளர்கள்!

சைனோபாம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ADB இணக்கம்