உள்நாடு

இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாடசாலை பிள்ளைகளிடையே நடத்தப்பட்ட உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி இணைய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் சுட்டிக் காட்டுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் 6.9 சதவீத பிள்ளைகள் சைபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு (2024) சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு மற்றும் குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு 13-15 வயதுடைய பிள்ளைகளிடையே நடத்தப்பட்டது.

6.1 சதவீத பிள்ளைகள் தேவையற்ற பாலியல் செயற்பாடுகளுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, பெண்கள் 4.7 சதவீதமாகவும், சிறுவர்கள் 7.5 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டிங் உறவுகள் காரணமாக 10.1 சதவீதம் பேர் வன்முறையை அனுபவித்ததாகவும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது

Related posts

நடுநிலையான விசாரணையை ஆரம்பிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

editor

இரத்தினபுரியில் கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம் : மனோ

புத்தளம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை