சூடான செய்திகள் 1

இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO) – 2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான 4 மாத காலத்திற்கு அரச பணிகளைத் தொடர்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடங்கிய இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

Related posts

பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரம்

நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்றுவந்த வர்த்தகர் மடக்கி பிடிப்பு : அபராதம் விதிக்கப்பட்டதோடு போலி நெய்யை அழிக்குமாறும் நீதவான் உத்தரவு!