உள்நாடு

இடைக்கால அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை 11 கட்சிகள் புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என 11 கட்சிகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் முற்றாக இராஜினாமா செய்து இடைக்கால அரசாங்கமொன்றில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும் என்ற போதிலும் ஜனாதிபதி நேற்று புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்துள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக 11 கட்சிகளும் தெரிவித்துள்ளன.

சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது.

Related posts

ஒன்றிணைந்துள்ள 90 சதவீதமானவர்களுக்கு வழக்கு இருக்கின்றது – சட்டம் அனைவருக்கும் பொதுவானது – டில்வின் சில்வா

editor

பாலஸ்தீன ஆதரவு – இலங்கை கால்பந்து வீரருக்கு 2,000 அமெரிக்க டொலர் அபராதம்!

editor

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – பிரதமர் ஹரிணி

editor