உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான சற்று பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

தென் மாகாணத்தில் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

திருட்டு சம்பவம் – பணிநீக்கம் செய்யப்பட்ட புகையிரத ஊழியர்கள்.

ஐ.தே.கட்சியின் 76வது ஆண்டு நினைவு தினம் இன்று

பூஸ்ஸ சிறைச்சாலை உண்ணாவிரதம் – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது