உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.

இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் தலதா அத்துகோரள

editor

இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

editor