உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

Related posts

ஜெட் விமானம் விபத்து – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

நாங்கள் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர

editor