உள்நாடு

இடியப்பத் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு தடை

(UTV | கொழும்பு) –  பிளாஸ்ரிக் மாலைகள் மற்றும் இடியப்பத் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தொடர்பான பொருட்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு வருடமும் கதிர்காமத்திற்கு சுமார் 300,000 பக்தர்கள் வருகை தருவதாகவும், சுமார் 2,000 கிலோ பொலித்தீன் மாலைகளை எடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாலைகளை அவர்கள் தரையில் வீசுகிறார்கள் அல்லது மெனிக்கங்கையில் வீசுகிறார்கள்.

பிளாஸ்டிக் மாலைகள் தடை செய்யப்பட்டதன் பின்னர், இயற்கை அல்லது எண்ணெய்க் காகித மலர்களைக் கொண்டு மாலைகள் தயாரிக்க உற்பத்தியாளர்களை அரசாங்கம் ஊக்குவிக்கும்.

பிளாஸ்டிக்கிற்கு பதிலாக இயற்கை மூலப்பொருட்களிலிருந்து சரம் கொப்பரை தட்டுகளை உற்பத்தி செய்வதை அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றது.

இந்த தயாரிப்பை பிரபலப்படுத்துவதற்கான சாத்தியமான திட்டங்களை அமைச்சு அதிகாரிகள் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளனர்.

இலங்கையில் நாளாந்தம் சுமார் 20 மில்லியன் பொலித்தீன் பைகள் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றது.

சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று பொட்டலப் பொதிகளை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

யாழில் 60போலி சாரதி அனுமதிப்பத்திரம் : சிக்கிக்கொள்ளும் நபர்!

நஷ்டம் தரும் அரசு நிறுவனங்களில் CEYPETCO இற்கு முதலிடம்