சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) கொழும்பில் இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இறுதி நேரத்தில் துடுப்பாட களம் புகுந்த துனித் வெல்லாலகே அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஆதில் ராசிட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
272 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணியின் இரண்டாவது விக்கட்டுக்காக வந்த வீரர்கள் பெரும் நெருக்கடியை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கினர்.
Ben Duckett 62 ஓட்டங்களையும், ஜோ ரூட் 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
எனினும் இலங்கை அணியினரின் தொடர்ச்சியான சிறப்பான பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்கள் படிப்படியாக சரிய ஆரம்பித்தன.
கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணியின் Jamie Overton அதிரடியாக துடுப்பாடினார்.
இறுதியில் இங்கிலாந்து அணியினால் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதன்மூலம் இலங்கை அணி இந்த தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
