வகைப்படுத்தப்படாத

இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மனு

(UTV|COLOMBO)-பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார்.

இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் முறையீட்டின்மீது லண்டன் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையே பெங்களூருவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் 13 வங்கிகளின் கூட்டமைப்பு வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம், விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 203 கோடியை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து (ரூ.9 ஆயிரத்து 853 கோடி) வசூலித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.

இதை இங்கிலாந்து கோர்ட்டு உறுதி செய்தது. அவரது சொத்துகள் முடக்கப்பட்டன.இப்போது தனது சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி விஜய் மல்லையா இங்கிலாந்து ஐகோர்ட்டில் உள்ள வணிக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவின் மீது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி விசாரணை நடத்த அந்த கோர்ட்டு பட்டியலிட் டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இரத்மலானையில் விசேட நிவாரண பொருட்கள் சேகரிப்பு நிலையம்

அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த தம்பிக்க பெரேரா!

Fourteen vessels redirected to Minicoy Island for safety