சூடான செய்திகள் 1

இ.போ.ச பேருந்து கட்டணங்களும் குறைக்க இணக்கம்

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணத்தை, இன்று(08) முதல் அமுலாகும் வகையில் 2 வீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் நேற்று(07) இடம்பெற்ற பேச்சுவார்தையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனினும், புதிய கட்டணத் திருத்தத்திற்கமைய, 12, 15, 20, 34, 41 ரூபா கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது.

அதேநேரம் 25, 30, 39 ரூபா கட்டணங்கள் மற்றும் 44 முதல் 67 வரையான கட்டணங்கள் ஒரு ரூபாயால் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை கட்டணங்களும் இன்று(08) நள்ளிரவு முதல் 2 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE[

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து