உள்நாடு

இ.போ.ச சொந்தமான அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – இன்று மற்றும் நாளைய தினங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து பேருந்துகளையும் இயக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வார இறுதி நாட்களில் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

வார இறுதியில் அதாவது, இன்று (21) மற்றும் நாளை (22) ஆகிய இரு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயிலும் சேவையில் ஈடுப்படமாட்டது என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் நேற்று (20) ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பயணிளை ஏற்றி இறக்குவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

Related posts

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

மாத்தறை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு