உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து கொண்ட கும்பல் ஒன்று இவ்வாறு செயற்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலைமையைக் கட்டுப்படுத்த மதுரங்குளிய பொலிஸார் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள தபால் நிலையங்கள்!

லொறியின் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலி

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது