உள்நாடு

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரியை காயப்படுத்திய சந்தேகநபர் கைது

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸ் அதிகாரி ஒருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயம் ஏற்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நேற்று (27) கைது செய்யப்பட்டு கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகர சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கொம்பனித் தெரு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா கைது

editor

2024 இல் 5% பொருளாதார வளர்ச்சி

editor

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து