அரசியல்உள்நாடு

ஆயுர்வேத துறையில் 300 பட்டதாரிகளுக்கு நியமனம்

அரச சேவையில் 72,000 பேரை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக உள்ளூர் ஆயுர்வேத வைத்தியத் துறையில் பணியாற்றுவதற்கு 7000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதனை முன்னிட்டு சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (03) கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த காலங்களில் தனிப்பட்ட அரசியல் தேவைகளின் அடிப்படையில் பல்வேறு வழிகளில் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதால், அரச ஊழியர்களின் எண்ணிக்கை தேவையான எண்ணிக்கையை விட அதிகரித்தது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைவாக, மொத்தம் 72,000 பேரை அரச சேவையில் சேர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் சுகாதார அமைச்சுக்கு மாத்திரம் சுமார் 9,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இவர்களில் சுமார் 7,000 பேரை ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 06 மாதங்களில், 4,141 தாதிய அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவத் துறைக்கு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஆயுர்வேத சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நோயாளிகளுக்கு தரமான பராமரிப்பை வழங்குவதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருத்துவ சேவையில் உள்ள முதன்மை தர மருத்துவ அதிகாரி பதவிகளுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கையை கணக்கிற் கொண்டு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள ஆயுர்வேதத் துறை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து!

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor

ரம்பாவால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம்!