உள்நாடு

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளுடன் நேற்றிரவு(29) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 20 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1,000 கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றியதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் கட்டி மூடைகள் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொரோனா அச்சம் காரணமாக சுகாதார திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது – முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

editor

13 இன் ஊடா தமிழீழத்தை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது – சரத் வீரசேகர.

ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்