உள்நாடு

ஆமி சமந்தவை விசாரணை செய்ய அனுமதி

(UTV|கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷ் உடன் தொடர்பை பேணி வந்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஆமி சமந்தவை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மினுவங்கொடை நீதவான் நீதின்றில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே, அவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிசாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சமீபத்தில் திவுலபிடிய, படல்கம பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்

தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றில் ஆஜர்

editor