வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தான் படைகள் நிகழ்த்திய தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உள்பட 8 பேர் பலி

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பாடில்லை. மாஸ்கோவில் சமரச பேச்சு வார்த்தை முடிந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு பார்யாப் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியை இலக்காக வைத்து, ஆப்கானிஸ்தான் படைகள் நேற்று முன்தினம் குண்டு வீச்சு நடத்தின.

பஸ்த்தாங்கோட் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உள்பட 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலின்போது ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவல்களை ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் ரேசாய் தெரிவித்தார்.

அதே நேரத்தில் தலீபான்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

 

 

 

Related posts

பணத்துக்காக 38 வயது பெண்ணை மணந்த அழகிய இளைஞன்!

நுவரெலியா மாவட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

Suspect arrested with 29.8 kg of Kerala cannabis