விளையாட்டு

ஆட்ட நிர்ணய சதி 2011 – ஆதாரங்கள் வழங்கப்படவில்லை – ஐசிசி

(UTV | கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான தகுதியான விசாரணையை ஆரம்பிப்பதற்கு தங்களுக்கு எந்தவொரு ஆதாரமும் இதுவரையில் வழங்கப்படவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

குறித்த ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஸல் (Alex Marshall) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், 2011 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கண்டறியப்படாதமையினால், அது தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர நேற்றைய தினம் (03), விளையாட்டில் இடம்பெறும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் பிரிவு தீர்மானித்துள்ளது.

Related posts

இலங்கை அணியின் மூவர் உள்ளடங்கிய தர்மசேனவின் கனவு அணி

இந்திய லெஜண்ட்ஸின் அதிரடிக்கு சவாலாக இலங்கை லெஜண்ட்ஸ்

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை