உள்நாடு

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட பாடசாலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிரியர் – அதிபர் சேவைக்கான சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக அமைச்சரவையால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதீர்மானத்தின் அடிப்படையில் பொது நிர்வாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் நிபந்தனைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

IOC எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தது

மாடியில் இருந்து விழுந்து ஒருவர் பலி – வௌ்ளவத்தையில் சம்பவம்

editor

USF ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு.