சூடான செய்திகள் 1

ஆசிரியர் தாக்கியதில் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…

(UTV|COLOMBO) காத்தான்குடி பகுதியிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் 17 மாணவர்கள் மீதே குறித்த ஆசிரியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த இந்த மாணவர்கள் கல்வி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என தெரிவித்து மாணவர்களை ஆசிரியர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஜனாதிபதி-சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல்…

ஐ.தே.கட்சியின் உறுப்பினர்களின் விபரம் இன்று சபாநாயகரிடம்-பா.உ நலின் பண்டார

சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்