உள்நாடு

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – இதுவரையில் தீர்க்கப்படாத தங்களது சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று(25) கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம், அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்திருந்தார்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்நிலையில், இன்று ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் கூடி தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து அறிவிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

   

Related posts

மேலும் 26 பேர் குணமடைந்தனர்

சாய்ந்தமருது நூலகத்தில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள்!

editor

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரீஸ்!