வகைப்படுத்தப்படாத

ஆசிரிய நியமனம் , இடமாற்றம் தொடர்பில் புதிய கொள்கை – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலநறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கு நிகழ்வு இன்று (22) முற்பகல் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்வி சீராக வேண்டும் என்பதற்காக தீர்மானத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி;, நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களினதும் பிரச்சினைகளை தீர்த்தல், வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே வகையில் சேவையாற்றுதல் ஆகியவை ஜனாதிபதி என்ற வகையில் தனது பொறுப்பாகுமென்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மாணவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்ட ஜனாதிபதி நினைவுப் படிகத்தை திறந்து வைத்து, ஐந்து வகுப்பறைகளுடனான புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்து கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.

‘புத்தெழுச்சிசெறும் பொலநறுவை’ மாவட்ட திட்டத்தின் கீழ் இந்த பாடசாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினர் நிர்மாண பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீநிலந்த, பொலநறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

வெனிசுலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

Tourism earnings drop by 71% in May

Murray and Williams wow Wimbledon again to reach last 16