உலகம்

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் 20 இடங்களில் 6 இந்தியர்களின் குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த பட்டியல் விபரங்கள் பின்வருமாறு,

இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 7.85 இலட்சம் கோடி ரூபா ஆகும்.

நான்காவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் மிஸ்திரியின் குடும்பத்தின் சொத்து மதிப்பு 3.25 இலட்சம் கோடி ரூபா ஆகும். இவர்களின் குடும்பம் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.

ஏழாவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஜிண்டால் குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 2.43 இலட்சம் கோடி ரூபா ஆகும். இந்த குடும்பம் ஓபி ஜிண்டால் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.

ஒன்பதாவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த பிர்லா குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 1.99 இலட்சம் கோடி ரூபா ஆகும். 7 தலைமுறைகளாக இந்த குடும்பம் உலோகங்கள், சீமேந்து மற்றும் நிதி சேவை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

பதின்மூன்றாவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த பஜாஜ் குடும்பம் உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு 1.74 இலட்சம் கோடி ரூபா ஆகும். இவர்கள் பஜாஜ் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.

பதினெட்டாவது இடத்தில் இந்தியாவை சேர்ந்த இந்துஜா குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 1.31 இலட்சம் கோடி ஆகும். இந்த குடும்பம் இந்துஜா குழும நிறுவனங்களை நடத்தி வருகிறது.

Related posts

ஓமானில் மசூதி அருகே துப்பாக்கி சூடு – 4 பேர் பலி – பலர் காயம்.

ஈரான்-மாலைத்தீவுகள் இடையே மீண்டும் தூதரக உறவு!

இங்கிலாந்து பிரதமர் பயணித்த கார் விபத்து