விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை இந்தியாவின் புவனேஷ்வர் எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த வீரர்கள் தியகமையில் இலங்கை விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தேர்வுப் போட்டிகளின்போது தெரிவுசெய்யப்பட்டனர்.

ஆசிய சாம்பியன்ஷிப் கழகத்தினால் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings

இலங்கை கிரிக்கட் அணி நியுசிலாந்துக்கு சுற்றுப் பயணம்