விளையாட்டு

ஆசிப் அலியின் மகள் அமெரிக்காவில் உயிரிழப்பு…

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

ஆசிப் அலியின் மகள் நூர் ஃபாத்திமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோயானது 4வது கட்டத்தை எட்டி விட்டதால், நூர் ஃபாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேசமயத்தில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆசிப் அலி விளையாடிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 2 வயது சிறுமி நூர் ஃபாத்திமா உயிரிழந்துள்ளார்.தனது மகள் உயிரிழந்த தகவல் கிடைத்தவுடன், இங்கிலாந்தில் இருந்து ஆசிப் அலி உடனடியாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 

 

 

 

Related posts

IPL சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்?

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஷேன் பண்டார கைது

editor

COLIN MUNRO ஆட்டம் நிறைவுக்கு