உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த உதவித் தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அந்த செயற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகையில் மே மாத உதவித் தொகை சில வாரங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.

அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் வசிக்கும் மேற்படி வயோதிபர்களுக்கான இந்த உதவித் தொகை உரிய குடும்பங்களிலுள்ள அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது.

அதற்கிணங்க 592,766 பயனாளிகளுக்கு ரூ. 2,963,830,000 உரிய வங்கிக் கணக்குகளில் வைப்பி லிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

editor

சபாநாயகரால் சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு பணிப்புரை

பாகிஸ்தானில் இலங்கையர் எரியூட்டப்பட்டு கொலை – 100 பேர் கைது [VIDEO]