விளையாட்டு

அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017

(UDHAYAM, COLOMBO) – சாய்ந்தமருது டஸ்கர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5ஆவ­து ஆண்டு நிறைவை முன்னிட்டுலீடர் அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண இறுதிப்போட்டியில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் .எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இரவுநேர மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பௌசி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற நிந்தவூர் றியல் இம்ரான் அணிக்கு 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக் கிண்ணத்தினையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்வில்; கௌரவஅதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், .எல். தவம், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களான .சி. யஹியாகான், உளவளத்துறை வைத்திய ஆலோசகர் அர்சாத் காரியப்பர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களர்கள்; கலந்து கொண்டனர்.

Related posts

மகளிர் உலகக் கிண்ண தகுதிகான் போட்டிகள் தற்போது கொழும்பில்

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

டி20 உலக கிண்ண இறுதிப்போட்டி இன்று