கேளிக்கை

அவெஞ்சர்ஸ் நடிகைக்கு குழந்தை பிறந்தது

(UTV | கொழும்பு) –    பிரபல ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சனுக்கு குழந்தை பிறந்துள்ளது.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ அவெஞ்சர்ஸ் படங்களில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்கார்லெட் ஜொஹான்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். லூசி, தி பிரெஸ்டீஸ், ஜோஜோ ரேபிட் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிகர் ரயன் ரேனால்ட்ஸை 2008-ல் திருமணம் செய்து 2011-ல் விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு ரொமைன் டவுரியாக் என்ற தொழில் அதிபரை 2014-ல் திருமணம் செய்து 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் நகைச்சுவை நடிகரான காலின் ஜோஸ்டைக்கை காதலித்து 2020-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஸ்கார்லெட் ஜொஹான்ஸனுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு காஸ்மோ என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர் நடிகைகளும், ரசிகர்களும் ஸ்கார்லெட்டுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related posts

உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்

ஆப்கானின் பிரபல நகைச்சுவை நடிகர் கொலை

ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா