உள்நாடு

அவுஸ்திரேலியாவில் இருந்த 50 பேர் நாட்டுக்கு

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவில் இருந்த 50 இலங்கையர் இன்று(21) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைத்தீவில் இருந்த 255 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலன்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 102 எனும் சிறப்பு விமானம் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் தற்காலிக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஊடகவியலாளர் கடத்தப்பட்ட சம்பவம் – கைதான இருவருக்கும் பிணை

editor

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்

ஆபத்தான நிலையில் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

editor