உள்நாடுபிராந்தியம்

அவுஸ்திரேலிய பெண் ஊடகவியலாளரின் கைப்பை திருட்டு – ஒருவர் கைது

உணவட்டுன கடற்கரைப் பகுதியில் உணவகம் ஒன்றிற்கு அருகில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பையைத் திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகவியலாளரான இளம் பெண், இலங்கைக்குத் தனிப்பயணியாக வருகை தந்துள்ளார்.

திருடப்பட்ட பையினுள் iPhone ரக கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் பணம் என்பன இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அவர் இன்று (04) உணவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (05) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – 132 பேர் கைது

editor

மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞர் பலி

தனிமைப்படுத்தலில் உள்ளோர் வாக்களிக்கும் முறை தொடர்பில் ஆராய்வு