உள்நாடு

அவுஸ்திரேலிய பிரதமரிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள காட்டு தீ அனர்த்தம் குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அந்நாட்டில் உறவுகளை இழந்தவர்களின் கும்பத்தினருக்கும் ஜனாதிபதி தனது அனுபதாபத்தை தெரிவித்து கொண்டார்.

சுனாமி மற்றும் இடையிடையே ஏற்படும் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் நாடு என்ற வகையில் இலங்கை மக்கள் அவுஸ்திரேலிய மக்களின் கவலையை புரிந்துக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய மக்களுக்கு இலங்கை மக்கள் ஒருதொகுதி தேயிலையை அன்பளிப்புச் செய்யவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்களுக்கு பூட்டு

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்

பாராளுமன்ற தேர்தலை நடத்த நிதி ஒதுக்கப்படவில்லை

editor